சீதையின் பெருமையும் ராவணனின் உண்மையும்
ராமாயணத்தில் சீதை ஒரு தூய்மையின் சின்னமாகப் போற்றப்படுகிறாள். ஆனால் அந்த தூய்மையை உலகம் அறிந்தது யாரால்?
ராமாயணத்தில் சீதை ஒரு தூய்மையின் சின்னமாகப் போற்றப்படுகிறாள். ஆனால் அந்த தூய்மையை உலகம் அறிந்தது யாரால்?
ராவனீஸ்வரன் அறக்கட்டளையின் முதன்மை நோக்கம்,
மகா சிவபக்தன் ராவணனின் உயரிய பெறுமை, பக்தி மற்றும் ஆன்மீக ஆழத்தை உலகிற்கு எடுத்துரைப்பதாகும்.
சிவபக்தியில் ராவணனை மிஞ்சியவன் யாருமில்லை என்பதே சாஸ்திரங்களும் புராணங்களும் கூறும் உண்மை.
சிவபெருமானிடம் தன்னையே அர்ப்பணித்த மகான் ராவணன், பக்தியின் உச்சத்தை அடைந்த ஒரு ஆன்மீகச் சின்னமாக விளங்குகிறார்.
ராமாயணத்தில் சீதையின் கற்பு, ஒழுக்கம் மற்றும் மகத்துவம் உலகிற்கு வெளிப்படக் காரணமாக இருந்தது ராவணனின் நிகழ்வுகளே என்பதையும் வரலாறு உணர்த்துகிறது. அந்த வகையில், சீதையின் பெருமைக்கும் புகழுக்கும் வழிவகுத்த மகான் ராவணனுக்கு நன்றி செலுத்தும் நோக்கில் இவ்வறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது.
இங்கு நிறுவப்படும் அனைத்து சிலைகளும் சிவனை மையமாகக் கொண்டு அமைக்கப்படுகின்றன.
ஏனெனில்—
அகிலமும் சிவனே
அண்டமும் சிவனே
ஆக்கமும் சிவனே
அழித்தலும் சிவனே
சிவமே சிவம்… சிவனே சிவனே!
இந்த அறக்கட்டளை, சிவபக்தி, ஆன்மீகம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களை எதிர்கால தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும் ஒரு புனித முயற்சியாக திகழ்கிறது.
ஓம் நமசிவாய் 🙏
“நான் ராமனின் அரவணைப்பில் இருந்தபோதும் என் ஒழுக்கத்தை உலகம் அறியவில்லை. ஆனால் நான் ராவணனின் கட்டுப்பாட்டில் இருந்தபோதுதான் என் ஒழுக்கத்தை உலகம் அறிந்தது. என்னை உலகறியச் செய்த ராவணனுக்கு நன்றி.”